சமூகநீதி மாதம் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 154-வது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி
ஆங்கிலேய அரசின் அடிமைத்தனத்திலிருந்தும் , சாதி சமூக அடிமைத்தனத்திலிருந்தும் மக்களை மீட்டெடுக்க, சமூக நீதியை நிலை நிறுத்தப் போராடிய, செப்டம்பர் மாதம் பிறந்த தமிழ் நாட்டின் மாபெரும் தலைவர்கள் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்(செப்டம்பர் 5), பேரறிஞர் அண்ணா(செப்டம்பர் 15), தந்தை பெரியார்(செப்டம்பர் 17) ஆகியோரைப் போற்றும் வகையில் செப்டம்பரை சமூகநீதி மாதம் எனவும், அவர்களின் பிறந்தநாளையும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் கொண்டாடுகிறது.
அதில் முதல் நிகழ்வாக இந்தியாவின் மாபெரும் சுதந்திரப் போராட்டத் தியாகி, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல், சமூக நீதிக் காவலர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153-வது பிறந்தநாள் உலகெங்கிலுமிருந்து அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இணையவழி நடத்தப்படுகிறது.
நாள்: செப்டம்பர் 4, 2025 (ஆவணி 19, தி.ஆ 2056) வியாழக்கிழமை, இரவு 09:00 மணி (கிழக்கு நேரம்)
செப்டம்பர் 5, 2025 (ஆவணி 20, தி.ஆ 2056) வெள்ளிக்கிழமை, காலை 6:30 மணி (தமிழ்நாடு நேரம்)
தலைப்பு: வ.உ.சி.யின் பன்முகத்தன்மை
சிறப்புரை:
வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
திருமிகு பிரசாத் பாண்டியன்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
நெறியாள்கை:
திருமிகு தமிழி (எ) டெய்சி ஜெயப்ரகாஷ்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
ஒருங்கிணைப்பு: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
அமெரிக்கா
-------------------
#வஉசி154 #voc154 #சமூகநீதிமாதம் #சமூகநீதி #கப்பலோட்டியதமிழன் #வஉசிதம்பரனார் #வஉசி #செக்கிழுத்தசெம்மல் #செப்டம்பர்5 #சேவாஞ்சிநாதன் #இந்தியவிடுதலை #விடுதலைப்போராட்டம் #சுதந்திரப்போராட்டம் #புரட்சிக்கவி #புரட்சிக்கவிஞர்பாரதிதாசன்தமிழ்மன்றம் #அமெரிக்கா
#vochidambaram #voc #socialjusticemonth #socialjustice #indianindependence #indianfreedom #indianfreedomfighters #september5
#puratchikkavi #PuratchikkavignarBharathidasanTamilMandram #america